Site icon News – IndiaClicks

பெண்களே வடகொரியாவின் சக்திவாய்ந்த ஆயுதம் பலம்….

tamil.neew.co.in-north koriya
அணு ஆயுதங்களை விட பெண்களே வடகொரியாவின் சக்திவாய்ந்த ஆயுதம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வடகொரியாவில் இருந்து தப்பி வந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். அது பின்வருமாறு…
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு நல்ல தோற்றமுடைய 400 பெண்கள் கொண்ட படையை வட கொரியா அனுப்பியுள்ளது. தங்களது அழகுக்காகவும், திறமைக்காகவும் தேர்தேடுக்கப்பட்ட இப்பெண்கள், அழகிய ராணுவம் என அழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து ஹுன் சாங்-வோல் என்ற பெண் கூறியது பின்வருமாறு. வெளியே சென்று, புன்னகையால் மற்றவர்களை ஈர்ப்பதே எங்களுக்கு அளிக்கப்பட்ட வேலை. வட கொரியாவின் கொள்கைகளை நாங்கள் பரப்ப வேண்டும்.
நாங்கள் எப்படி பெருமைப்படுகிறோம் என்பதை காட்டுவதற்காக எதிரியின் இதயத்தில் நுழைகிறோம். நாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும்.
தெரியாத இடத்தைப் பார்த்து அதிர்ச்சியடைய கூடாது. ஒரு நிமிடத்திற்கு கூட தாய் நாட்டை மறக்க கூடாது. ஜென்ரல் கிம்மிற்கு மரியாதை செலுத்த இருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது என கூறியுள்ளார்.
Exit mobile version