Site icon News – IndiaClicks

பிறந்த குழந்தையை 5 மாதங்களாக அன்னையிடம் தர மறுத்த மருத்துவமனை

tamil.neew.co.in-birth baby

டெலிவரிக்கு உண்டான பில் தொகையை கட்டாததால் பிறந்த குழந்தையை ஐந்து மாதங்களாக பெற்ற அன்னையிடம் தர மறுத்த மருத்துவமனை குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த செய்தி இணையத்தில் கசிந்தபோது, சமூகவலைத்தள பயனாளிகள் அந்த அன்னைக்காக பணம் வசூலித்து கொடுத்தனர். பின்னர் ஒருவழியாக ஐந்து மாதங்கள் கழித்து அன்னையிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து மாதங்களாக அன்னையிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மருத்துவமனையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை போலீசார் விடுதலை செய்தனர். இந்த நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் காபான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Exit mobile version