Site icon News – IndiaClicks

ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற கேரள பெண்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

tamil.neew.co.in-human rights
தமிழகத்தில் உள்ள தம்பதியினருக்கு கேரளாவை சேர்ந்த பெண் தனது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் பிறந்து நான்கு நாட்களான தனது குழந்தையை தமிழகம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கேரள மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஆறு வாரத்துக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Exit mobile version