Site icon News – IndiaClicks

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை: அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் சாதனை

tamil.neew.co.in-cancer medicine
கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை வழிமுறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்று நோயால் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாக குணப்படுத்தப்படுகின்றது. ஆனால் சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். இதனால் அவற்றை குணப்படுத்த முடியாமல் போகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலியை வைத்து புற்றுநோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இந்த சிகிச்சையின் படி, புற்று நோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க வேண்டும், அவ்வாறு செய்தால் கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும். இதன்மூலம் புற்று நோயை எளிதில் தடுக்கலாம்.
இந்நிலையில் இச்சோதனை மனிதர்களுக்கும்  விரைவில் செயல்படுத்தபடும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Exit mobile version