LatestNewsPolitics

பாஜக கூட்டணியில் ஐஜேகவிற்கு 45 தொகுதிகளும் தேவநாதன் கட்சிக்கு 24 தொகுதிகளும் ஒதுக்கீடு

பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு‌ 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐஜேகே சார்பாக கட்சி‌யின் நிறுவனத்‌ தலைவர் பாரிவேந்தர், பொதுச்செயலாளர் ஜெயசீலன், தலைவர் கோவைத்தம்பி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பின்னர், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான உடன்பாட்டில், பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ஐஜேகே தலைவர் கோவைத் தம்பியும் கையெழுத்திட்டனர். தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு‌ 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது. தொகுதி உடன்பாடு ஏற்படாததால் விலகுவதாக புதி‌ய நீதிக்கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 45 தொகுதிகள்:

கோவில்பட்டி, மதுரை வடக்கு, நத்தம், வேடசந்தூர், திருப்பத்தூர், சிவகங்கை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி‌‌, அறந்தாங்கி, திருச்சி மேற்கு, லால்குடி, முசிறி, துறையூர் , அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குன்னம், அரியலூர், திருவையாறு, நன்னிலம், பூம்புகார்‌, திட்டக்குடி , விருத்தாசலம், நெய்வேலி, மயிலம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரவாயல், திரு.வி.க.நகர் , காட்பாடி, குடியாத்தம் , கலசப்பாக்கம், வந்தவாசி , கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, சேலம் மேற்கு, ‌ ஆத்தூர் , ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 45 தொகுதிகள் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 தொகுதிகள்:

நாங்குனேரி, சங்கரன்கோவில் , பழனி, திருமயம், திருவாடானை, ஒரத்தநாடு, கீழ்வேலூர், பண்ருட்டி, புவனகிரி, திருக்கோயிலூர், சோழிங்கநல்லூர், உத்திரமேரூர், அம்பத்தூர், சோளிங்கர், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, செங்கம்,, திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பர்கூர், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு குளித்தலை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(www.puthiyathalaimurai.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *