Site icon News – IndiaClicks

இர‌த்த உ‌ற்ப‌த்‌திக்கு இதை செய்து பாருங்க

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து, உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.

தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.

இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்

பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

Exit mobile version