Site icon News – IndiaClicks

கற்பனை திறனுடைய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள்

Optimistic robot --- Image by © Volker Möhrke/Corbis

சுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

’டீப் மைண்ட்’ எனும் தொழில்நுட்பத்தினை ரோபோக்களில் செலுத்தும் முயற்சியில் கூகுள் குழு செயல்பட்டு வருகின்றது. அதாவது முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு அடுத்து அந்த ரோபோக்களில் கற்பனை திறனை புகுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

ரோபோ வடிவமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் ரோபோக்கள் மனிதனின் புரோகிராமிற்கு ஏற்ற வகையிலேயே செயல்படும். ஆனால் தற்போது தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து ரோபோக்களுக்கு உணர்வு, கற்பனை திறன் போன்றவற்றை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக கண்ணாடி டம்ளர் ஒன்றினை மேசையின் விளிம்பில் வைக்கும்போது அது விழுவதற்கு வாய்ப்பு உள்ளது அதை பாதுகாக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவிற்கு கற்பனை திறனை ரோபோவிற்கு புகுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் வெற்றியடைந்தால் ரோபோ சுயமாக சிந்திக்கும், பகுத்தறிவு திறனுடன் செயல்படும், எதிர்காலத்தைப் பற்றியும் கற்பனை செய்யும், என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் ரோபோ உலகம் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version