வாட்ஸ்ஆப் சேவை தற்காலிக தடைப்பட்டது ஏன்? 3 மாதத்தில் இரண்டு முறை நடந்துள்ளது
வாட்ஸ்ஆப் மெஸ்ஞ்சர் செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியானது இன்றோடு(03/11/2017) சேர்த்துக் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சேவை சில நிமிடங்கள் தடைப்பட்டுள்ளது. அதனால் சமுக வலைத்தளங்களில் #Whatsappdown என்ற டேக்கு டிரெண்டு ஆனது.
இந்த டேக்கானது இந்தியா, பாக்கிஸ்தான், பிரட்டன், ஜெர்மனி, உலகம் முழுவதிலும் இன்று டிரெண்ட் ஆனது.
முன்பு இதேப்போன்று 2017 ஆகஸ்ட் 31-ம் தேதி ஐரோப்பா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவை தற்காலிக துண்டிப்பில் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்துச் சிங்கப்பூரில் உள்ள பேச்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு வாட்ஸ்ஆப் சேவை ஏன் தற்காலிகமாகத் தடைப்பட்டது என்பதற்கான காரணம் தெரிவில்லை என்றும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் யூபிஐ வழியாகப் பணப் பரிவர்த்தனை சேவையினை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்ஆப் பே என்ற சேவை துவங்க உள்ளதாகவும் அதற்காக ஒரு ரூபாய் வடிவில் பொத்தான் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.