Site icon News – IndiaClicks

1 மில்லியன் ஸ்மார்ட்போன்: ரெட்மி அதிரடி விற்பனை!

tamil.neew.co.in-Redmi phone
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் வெளியான ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
ரெட்மி 5A ஸ்மார்ட்போன் டிசம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 5A ஸ்மார்ட்போன் 2 ஜிபி ராம் மாடல் ரூ.5,999 மற்றும் 3 ஜிபி ராம் மாடல் ரூ.6,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆஃப்லைனில் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் எச்டி 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே,
# 2 ஜிபி / 3 ஜிபி ராம், 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
# 3000 எம்ஏஎச் பேட்டரி திறன், ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
ரெட்மி 5A இரண்டு மாடல்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.