நான் பயர்பாக்ஸ் உலவியையே எனது கணினி மற்றும் மொபைலில் பயன்படுத்தி வருகிறேன், அனைவரையும் பயர்பாக்ஸை பயன்படுத்தவே நானும் அறிவுறுத்தி வருகிறேன். கூகள் குரோமிற்கு சிறந்த மாற்று மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) தான்.
கட்டற்ற & இலவச இணைய உலவியான மோசில்லா பயர்பாக்ஸ் இன்று தனது 55ம் பதிப்பை வெளியிடுகிறது.
WebVR Virtual Reality Support:
கணினி (டெஸ்க்டாப்) உலவியிலேயே VR (கானல் காட்சி) வகை வீடியோக்களை பார்க்கும் வசதியை இன்று வெளியிடுகிறது. இதன் மூலம் உங்களிடம் VR கண்ணாடி இருந்தால் உங்கள் கணினியில் உள்ள புதிய பயர்பாக்ஸ் உலவியில் VR அனுபவத்தை பெறலாம்.
Performance Updates:
64 பிட் பதிப்பு பயர்பாக்ஸ் அதிகமாக முறை கிராஷ் (Crash) ஆவதை தடுக்க பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கூகள், விக்கிபீடியா, யூ டியூப் போன்ற தளங்களில் தேடுவதை உலவியில் இருந்தே தேடி எடுக்கும் வகையில் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் – 64 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்
தமிழ் – 32 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்
ஆங்கிலம் – 64 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்
ஆங்கிலம்- 32 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்