3 ப்ரைமரி கேமரா: அசத்தும் ஹூவாய் நிறுவனம்..
ஹூவாய் நிறுவனம் அடுத்த P-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் பெறும். இந்த ஸ்மார்ட்போன் P11 அல்லது P20 என அழைக்கப்படுமாம்.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 40 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு, 5X ஹைப்ரிட் சூம், 24 எம்பி செல்ஃபி கேமரா கொண்டு இருக்கலாம்.புதிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 10 ப்ரோவை விட சிறியதாகவும், ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனினை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.