ஹானர் ஸ்பெஷல் ரெட் எடிஷன்… அமேசானில் மட்டுமே!
ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஸ்பெஷல் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹானர் 7X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.12,999. பிளாக், புளூ, கோல்ட் ஆகிய நிறங்களில் வெளியான ஹானர் 7X தற்போது ஸ்பெஷல் எடிஷனாக ரெட் நிற்த்தில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹானர் 7X சிறப்பம்சங்கள்:
# 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
# 4 ஜிபி ராம், 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை ஸ்கேனர், 3340 எம்ஏஎச் பேட்டரி திறன்