விநோத நோயால் 2 அடி உயரம் குறைந்த இளைஞர்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விநோத நோயால் பாதிக்கப்பட்டு 2 அடி உயரம் குறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் தனது உடலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்துள்ளார். அவருக்கு உடல் எடை குறைந்ததுடன் உயரமும் குறைந்துள்ளது.
இது அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து பலமுறை மருத்துவரை அணுகியுள்ளார். ஆனால் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. 21வயது வரை தனது உடல்நிலை நன்றாக இருந்ததாகவும், அதன்பிறகு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விநோத நோயை குணப்படுத்த அரசு தமக்கு உதவ வேண்டும் என ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *