உலகின் சக்தி வாய்ந்த ராணுவ படை இவைதான்….
உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் Global Firepower List 2017 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. சில அடிப்படை கணக்குகளை கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவை ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்று புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும். இந்த ஆய்வில் 133 நாடுகள் இடபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும், நான்காவது இடத்தில் இந்தியாவும், ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
மேலும், அடுத்தடுத்த இடங்களில் ஜப்பான், துருக்கி, ஜெர்மெனி, எகிப்த் ஆகிய நாடுகள் உள்ளன. அனைத்து வகையில் சிறந்து உள்ளதாக மார்தட்டிக்கொள்ளும், அமெரிக்காவையே அழிப்பதாக சவால் விடும் வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராரது அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது.