Site icon News – IndiaClicks

2 ஆண்டுகளுக்கு பின் உயிரிழந்த வாலிபருக்கு பிறந்த இரட்டை குழந்தை

tamil.neew.co.in-twins

21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி அதிசயிக்கும் வகையில் முன்னேறி வரும் நிலையில் மருத்துவத்துறையிலும்டெக்னாலஜி மூலம் மாயாஜாலங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் உயிரிழந்த மகனின் விந்தணுவை வைத்து இரட்டை குழந்தைகள் பிறக்க வைத்துள்ளனர் அந்த வாலிபரின் பெற்றோர்கள்

புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் உயர்கல்வி படித்து வந்தபோது திடீரென புற்றுநோயால் தாக்கப்பட்டார். அவருக்கு மூளைப்புற்றுநோய் இருந்ததால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறினர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக அந்த வாலிபர் தனது விந்தணுவை ஜெர்மன் மருத்துவமனையில் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்

இந்த நிலையில் மகனின் விந்தணு ஜெர்மனி மருத்துவமனையில் இருப்பதை அறிந்த அவருடைய பெற்றோர்கள், அந்த விந்தணுவை வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தைகளை பெற்றெடுக்க விரும்பினர். இதனையடுத்து வாடகைத்தாய் ஏற்பாடு செய்யப்பட்டு சமீபத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகனின் புத்திசாலித்தனமான முன்னேற்ப்பாட்டால் தற்போது அவரது பெற்றோர்கள் இரு பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளனர். மருத்துவ உலகின் இந்த மாயாஜாலம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.