Site icon News – IndiaClicks

2 நாட்களுக்கு கடும் குளிர் வெதர்மேன் எச்சரிக்கை!

tamil.neew.co.in-vetharmen

மழையை பற்றி எச்சரிக்கை விடுத்து வந்த வெதர்மேன், தற்போது குளிரை பற்றியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குளிர் குறித்த பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமான குளிர் இருந்து வருகிறது. மாலை முதலே குளிரின் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும், விடியற் காலையிலுல் குளிர் அதிகப்படியாக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் வெதர்மன் தனது பேஸ்புக் பக்கத்தில், குளிர் சூழல் பற்றி கணிப்பு ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் இருக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான குளிர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.