ரூ.999-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: வோடபோன் – பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்!!
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலையில் கேஷ்பேக் ஆஃபர்களுடன் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முன்னதாகவே இது போன்று சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், வோடபோன் தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் உடன் இணைந்து ரூ.999-க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையில் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. அதுவும் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் MyFirst4GSmartphone திட்டத்தின் கீழ் வோடபோன் இந்த கேஷ்பேக் ஆஃபரை வழங்குகிறது. வோடபோன் சேவையை பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் வாங்குவோர் குறைந்தபட்சம் ரூ.150-க்கு ஒவ்வொரு மாதமும் ரிசார்ஜ் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 36 மாதங்கள் ரிசார்ஜ் செய்ய வேண்டும். முதல் 18 மாதங்களுக்கு பிறகு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1,100 கேஷ்பேக் வழங்கப்படும்.
வோடபோன் சார்பில் வழங்கப்படும் ரூ.2000 கேஷ்பேக் வாடிக்கையாள்ரகளின் எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் பிளிப்கார்ட் தனது சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட தொகை தள்ளுபடி சேவையை வழங்குகிறது.