Site icon News – IndiaClicks

சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு; பயணிகள் கடும் அவதி

tamil.neew.co.in-train drop
பராமரிப்புப் பணியின் காரணமாக சென்னை லோக்கல் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை லோக்கல் ரயில் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடை பெற்று வருவதால் இன்று ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செஙல்பட்டிலிருந்து கடற்கரை வரை செல்லும் ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதே போல் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில்களும் எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது.  சென்ட்ரலில் இருந்து எழும்பூர் வழியாக செல்லும் வெளியூர் ரயில்களும், எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது.
இதனையடுத்து வெளியூர் செல்லும் பயணிகளும் இந்த ரயில் சேவை மாற்றம் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை எழும்பூரில் மக்கள் நீண்ட நேரம் ரயிலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது, அதே நேரத்தில் கூட்ட நெரிசலில் மக்கள் தவித்து வருகின்றனர். இன்று முழுவதும் பராமரிப்பு பணி நடைபெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.