Site icon News – IndiaClicks

தமிழகத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது; ரயில்வே இணையமைச்சர் தகவல்

tamil.neew.co.in-train3
தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேருந்தில் தான் கட்டணம் உயர்வு, ஷேர்  ஆட்டோக்களில் பயணம் செய்யலாம் என நினத்தால் பஸ் கட்டண உயர்வை பயன்படுத்தி சென்னையில் ஷேர் ஆட்டோக்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்தி அடாவடி செய்து வருகின்றனர்.

சென்னையில் சாதாரண பேருந்தில் ஒருவர் பயணம் செய்தால் குறைந்த பட்சம் 6 ரூபாயும் அதிக பட்சம் 41 ரூபாயும் செலவாகிறது. ஆனால் இதே மின்சார ரயிலில் பயணம் செய்தால் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயும் அதிக பட்சமாக 10 ரூபாய் மட்டுமே செலவாகும் . இதனால் பொதுமக்கள் அதிகமாக மின்சார ரயிலை தேர்தெடுக்கின்றனர். அதேபோல் வெளியூர் பயணங்களுக்கும் பேருந்து கட்டணத்தை ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் குறைவாக உள்ளது இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வையடுத்து ரயில் கட்டணமும் உயர்த்தப்படும் என்று வதந்திகள் பரவியது. இதுகுறித்து  கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே இணை அமைச்சர் ராஜேன் கொஹென் தமிழகத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் பலர் நிம்மதியில் ஆழ்ந்துள்ளனர்.