சுப்ரீம் கோர்ட் தடையை மீறி நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
முழு அடைப்பு போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் நாளை ஒருசில கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிடவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டு
வரும் நிலையில் மகதாயி நீரைத் கோவா பாஜக கர்நாடகாவிற்கு திறந்துவிடவில்லை என்று கூறி இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இருப்பினும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.