Site icon News – IndiaClicks

3வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் : அவதியில் பொதுமக்கள்

tamil.neew.co.in-transport
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல காரணங்களை முன்னிறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக இன்று தொடர்கிறது.
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கடந்த 4ம் தேதி மாலை முதல் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதிமுகவை சேர்ந்த சில சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்குகின்றனர். அதாவது 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அதை ஏற்க போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பணிக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, இதை பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.