அரசு பேருந்துகளில் அதிகரிக்கப்பட்ட பாஸ் தொகை..

தமிழக அரசு பேருந்து கழகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் பாஸ் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் முன்பு ஒருநாள் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல், ஒரு மாதாந்திர பாஸ் தொகை ரூ.1000 ஆக இருந்தது.

அந்நிலையில்தான், சமீபத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. எனவே, ஏற்கனவே பாஸ் வைத்திருந்தவர்கள் எத்தனை நாட்களுக்கு அதை பயன்படுத்த முடியும் என்கிற குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான், ஏற்கனவே மாதாந்திர பாஸ் எடுத்தவர்கள் முடியும் வரை அதை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு நாள் பாஸ் கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.80 ஆகவும், ரூ.1000ஆக இருந்த மாதாந்திர பாஸ் தொகை, ரூ.1300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், மாதாந்திர பாஸ்களை வருகிற 14ம் தேதி முதல் பேருந்து நிலையங்களில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *