3 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கிவிட்டன.

மேகாலாயாவில் 59 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 59 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த மூன்று மாநிலங்களில் இருந்து வெளிவந்துள்ள முதல்கட்ட முடிவில் மேகாலாயாவில் காங்கிரஸ் ஒரு இடத்திலும், திரிபுராவில் மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தலா 5 இடங்களிலும், நாகலாந்தில் பாஜக ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.

பாஜக இதுவரை 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. இதில் 9 மாநிலங்களில் கூட்டணி கட்சி ஆட்சி உள்ள நிலையில் தற்போதைய மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தால் 22 மாநிலங்களில் ஆட்சி செய்து சாதனை படைக்கும். இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக ஆட்சி கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் விரிவடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *