Site icon News – IndiaClicks

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியர்!

அமெரிக்காவில் கணித ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

ஏற்கனவே அமெரிக்காவில்  ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். இதற்காக அதிபர் டிரம்ப், பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜார்ஜியாவில் உள்ள வித்தியா ஸ்பிரிங் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அமெரிக்க மக்கள் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்ற டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.