யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றாலே தானாக அனைவரது கையும் யூடியூப் தளத்தின் முகவரியை டைப் அடிக்க தொடங்கிவிடும். இந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. அரிய செய்திகள் முதல் ஆபாச படங்கள் வரை இதில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம்

இந்த நிலையில் இந்த யூடியூப் இணையதளத்தை அதிகம் பார்க்கும் பகுதி மக்கள் யார்? என்பது குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சமையல் குறிப்புகள், கல்வி, அரசியல், சினிமா ஆகிய வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுவதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 220 மில்லியன் மக்கள் யூடியூப்பை பயன்படுத்தி வரும் நிலையில் ஃபேஸ்புக் மோகம் உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் குறைந்து வருவதாகவும், டுவிட்டரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *