சிரிய நாட்டு போரை எதிர்த்து குரல் கொடுத்து வரும் தமிழர்கள்

சிரியாவில் நடந்துவரும் போரை எதிர்த்து இணையதளத்தில் தமிழர்கள் அதிகளவில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு,  ராணுவ தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.  இந்த தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும்  700 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் சிரியாவில் நடைபெற்று வரும் போரை எதிர்க்கும் வகையில் தமிழர்கள் வலைதளங்களில் #SaveSyria #SaveSyrianChildren #syria tamil போன்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அங்கு நடக்கும் கொடுமைகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிரிய போர் குறித்து உலகளவில் அதிகமாக தேடுவது தமிழர்கள் தான் என கூகுள் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *