Site icon News – IndiaClicks

புலிகளின் தங்கத்தை விடாப்பிடியாக தேடும் இலங்கை

tamil.neew.co.in-gold 3
முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை இலங்கை ராணுவம் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களிடம் இருந்த தங்கங்களை இறுதி யுத்த காலத்தில் மண்ணில் புதைத்து வைத்ததாக செய்திகள் வதந்தி போல் பரவியது. இலங்கை அரசு புலிகள் புதைத்த தங்கத்தை 9 ஆண்டுகளாக தேடி வருகிறது.
கடந்த மாதம் 17ஆம் தேதி முல்லை தீவில் தங்கத்தை தேடும் பணிகள் நடைபெற்றது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதி லெனின்குமார் தலைமையில் மீண்டும் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது.
தங்கம் கிடைக்கவில்லை என்றாலும் இலங்கை அரசு விடாமல் தொடர்ந்து தேடி வருகிறது. இதில் ஏன் இலங்கை அரசு இந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்று தெரியவில்லை.