Site icon News – IndiaClicks

ரயில் படிக்கட்டில் அதகளம் செய்பவர்களுக்கு ஆப்பு வைத்த தெற்கு ரயில்வே

tamil.neew.co.in-train
ரயில் படிக்கட்டுக்ளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலாக இருந்தாலும் பேருந்தாக இருந்தாலும் படிகளில் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை விளையாட்டாக செய்து வருகின்றனர். இதனால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. அதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
ஆனால் மாணவர்கள் படிகளில் பயணம் செய்து தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் மின்சார ரயிலில் தொங்கி கொண்டு பயனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை தடுக்க தெற்கு ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-
2017ஆம் ஆண்டில் மட்டும் படிகளில் பயணம் செய்ததற்காக சுமார் 7 ஆயிரத்து 627 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிகளில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.