Site icon News – IndiaClicks

தென்கொரியவிற்கு விருந்து படைக்கும் வடகொரியா….

வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகள் மத்திடில் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரியா தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.
இதனால் நீண்ட நாட்களாக இருந்த பகை சற்று சுமூக நிலையை எட்டியுள்ளது. மேலும், வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இயூய்-யாங் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.
இந்த குழு, வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து பேசியுள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கோரி பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். ஆனால், இதற்கு வடகொரியா என்ன பதில் கூறியுள்ளது என தெரியவில்லை.
மேலும், வடகொரியா வந்துள்ள தென்கொரிய பிரதிநிதிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் இன்று இரவு விருந்து அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.