Site icon News – IndiaClicks

சீனாவில் குளிரால் உறைந்த கடல்!

tamil.neew.co.in-sea

உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் குளிர் காரணமாக கடலே உறைந்து போன நிகழ்வு அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ளது.
சிங்செங்க் மாகாணத்தின் அருகேயுள்ள, லியாவோடாங் வளைகுடா பகுதியில் இந்த கடல் அமைந்துள்ளது. இங்கு கிட்டத்தட்ட 130 கி.மீ சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜியுஹூவா தீவில் வசிக்கும் 3000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.