69வது குடியரசு தினம் – டெல்லியில் முன்னேற்பாடுகள் தீவிரம்
இந்தியாவின் 69வது குடியரசு தின நாள் விழா வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதி குடியரசு விழா கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, தலைநகர் டெல்லியில் மத்திய அரசு சார்பில் குடியரசு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்வேறு நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அதுபோல், இந்த முறையும் வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதாலும், இந்த விழாவில் பல நாடுகளிலிருந்து விருந்தினர்கள் மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொள்வதாலும் அவர்களின் பாதுகாப்பு கருதி, டெல்லியில் 9 நாட்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.