Site icon News – IndiaClicks

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு

tamil.neew.co.in-erath quke
பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியா தீவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் இன்று காலை 3.45 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பின்பு சிறிது நேரம் கழித்து அங்கு நிலைமை சீரானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும்  வெளியிடவில்லை.
இந்த நிலநடுக்கமானது எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டு இருக்கிறது என ஆமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.