Site icon News – IndiaClicks

சிரியா போரின் பின்னணியில் வடகொரியா: வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

சிரியா அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான் போர் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. சிரியா அரசிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் பின்னணியில் ஆதரவாக பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன. 

 அந்த வகையில், சிரியா அரசிற்கு பின்னணியில் வடகொரியா செயல்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி கடந்த இரண்டு வருடமாக சிரியாவின் பின்னணியில் வடகொரியா மறைமுகமாக செயல்பட்டு வந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2012 போர் துவங்கியதில் இருந்து சிரியா அரசுடன்  வடகொரியா அதிபர் நட்பு பாராட்டி வருகிறாராம். மேலும், வடகொரியா சிரிய அரசிற்கு கெமிக்கல் குண்டுகளை மறைமுகமாக வழங்கி வந்துள்ளது. இதுவரை 12 கப்பல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800-க்கும் அதிமான மக்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.