பனியில் உறைந்த எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சி
அமெரிக்காவின் எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போனது.
கடந்த சில தினங்களாக வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் -34 டிகிரி குளிர் நிலவியது. கடும் குளிரிலும் சுற்றுலா பயணிகள் நயாகராவில் அழகை கண்டுகளிக்க குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடும் குளிர் நிலவுவதால் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்துள்ளது. இதனால் நார்னியா படத்தில் வரும் காட்சி போல் பனி பொழிவால் மரங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன.