Site icon News – IndiaClicks

சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் கண்டுபிடுப்பு

tamil.neew.co.in-kiragangal
சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
ஒகலாமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே உதவியுடன் சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மைக்ரோ லென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
கண்டறியப்பட்டுள்ள கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழு கூறியதாவது:-
இந்த கண்டுபிடிப்பால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. மைக்ரோ லென்சிங் என்ற சக்தி வாய்ந்த நுண் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணம் இந்த கண்டுபிடிப்பு என்று கூறியுள்ளனர்.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளதால் அவற்றின் தட்பவெட்பம் சூழ்நிலை குறித்து தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.