Site icon News – IndiaClicks

100 புதிய கிரகங்கள்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சூரிய மண்டலம்!

tamil.neew.co.in-suriya mandalam
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு கெப்லர் என்னும் விண்கலத்தை, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரங்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பியது.  
இந்த கெப்லர் விண்கலம் தனது சக்திவாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்தி சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.
இதுவரை இந்த விண்கலம் 300 புதிய கிரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த திட்டம் கே 2 மிஷின் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் 149 கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் 100 கிரங்கள் புதிய கிரகங்களாகும். டென்மார்க்கை சேர்ந்த டெக்னிக்கல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் 275 பேர் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.