தரம் தாழ்ந்த விமர்சனம்: மர்ம கடிதத்தால் அதிர்ந்த அமெரிக்கா…
அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில் உள்ள விர்ஜீனியா மாநிலத்தின் ஆர்லிங்டன் கவுன்ட்டி, மையர்-ஹெண்டர்சன் ஹால் கட்டிடத்தில் அமெரிக்க ராணுவ மற்றும் கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கடற்படை அலுவலகத்திற்கு தபாலில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடித்தத்தை ஒருவர் பிரித்து படித்த போது அவருக்கு அரிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் அருகில் இருந்த 10 சக வீரர்களுக்கும் கைகள் மற்றும் முகத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மூவருக்கு மூக்கில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த கடித உறை ஏதேனும் விஷ திரவம் கொண்டுள்ளதா என் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், அதில் எந்தவொரு விஷ் தன்மையும் இல்லையாம். ஆனால் அந்த கடிதத்தில் தரம் தாழ்ந்த வசவு சொற்கள் இடம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மர்ம கடிதத்தை பற்றி கடற்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்