Site icon News – IndiaClicks

ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசல்: ஒற்றை இமெயில் கிளப்பிய சர்ச்சை!

tamil.neew.co.in-ebil tower
உலகின் முதல் உயர்ந்த காட்சி கோபுரம் ஈபிள் கோபுரம்தான்.  இப்போது உலகின் மிக உயரமான காட்சி கோபுரம் என்றால் அது துபாயில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மேலிருக்கும் காட்சி கோபுரம்தான்.
தற்போது பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரம் குறித்து வெளியாகியுள்ள ஒரு இமெயில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அதாவது ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசம் அமைக்கப்படவுள்ளதாக அந்த இமெயில் தெரிவிக்கிறது.
மேலும், அந்த இமெயில் குறிப்பிட்டுள்ளதாவது, ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் இஸ்லாமியர்களுக்காக பள்ளிவாசல் திறக்கப்படவுள்ளது. இந்த பள்ளிவாசல் ஒரே சமயத்தில் 45 பேர் தொழுகை செய்யும் அளவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவிய இந்த இமெயில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இது ஈபிள் கோபுர நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது இது தவறான செய்து என்றும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.