மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் அறிவிப்பு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்த நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய போராட்டத்தினால் ஜல்லிக்கட்டு நடத்த தனி மசோதா இயற்றப்பட்டு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் தேதி குறித்து முடிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினர்
இதன்பின்னர் அவனியாபுரத்தில் 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனனத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது