இந்தியா – அமெரிக்கா கூட்டு முயற்சியில் 3வது தொழில் தொடக்க மையம்
அமெரிக்காவின் தொழில் முனைவோர் மூலம் சந்தை சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவின் புதுமையான தொடக்கங்களுக்கு உதவி செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய கென்னத் ஐ ஜஸ்டர் கூறியதாவது:-
நெக்சஸ் தனது வேலைகளை மார்ச் மாதம் 2007ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் 10 தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிகளை ஆரம்பித்தது. அப்போது 10 வாரம் ப்ரீ இன்குபேஷன் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் தொழில்கள் தொடங்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக தொழில் தொடங்குபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஜனவரி மாதம் இறுதியில் இது தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
கல்ந்துகொண்ட அனைவரும் இந்திய வேளாண்மைதுறையில் விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் லாபம் ஆகியவை உயர உதவியாய் இருக்க வேண்டும். மேலும் இயற்கை பூச்சிக்கொள்ளி குறைந்த விலையில் கிடைக்க வழி வகுக்கவும்.
நெக்சஸ் அமைப்பு பொருளாதார தொழில்நுட்பம் மற்றும் கல்விதுறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.