Site icon News – IndiaClicks

கர்நாடகாவில் கொண்டாட்டம்: தமிழகத்தில் திண்டாட்டம்

tamil.neew.co.in-karnataka water
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பினர் கொண்டாடினர்.
காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்சி நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சி இருப்பதால் கர்நாடகாவிற்கு 14.75 டிஎம்சி கூடுதலாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், தமிழக விவசாயிகளின் தேவைக்கு 264 டிஎம்சி நீரை தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், 177.25 டிஎம்சிதான் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஓசூரில் கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பினர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.