கொரிய நாடுகளை எட்டிய ஜியோ டிவி…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகள் மற்றும் குறைந்த ரீசார்ஜ் கட்டணம் மூலம் இந்தியா முழுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தற்போது ஜியோ கொரிய நாடுகள் வரை சென்றுள்ளது.
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான நாளை துவங்குகின்றன. 23 வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழா வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.
மேலும், 24 X 7 லைவ் டெலிகேட்ஸ் பேஸ்புக், டிவிட்டர் பகுதிகளில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.