தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் – கலக்கிய ஜப்பான்

ஜப்பானைச் சேர்ந்த சுருமாக்கி என்பவர் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க நீரில் மிதக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் காரை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
உலகின் நான்காவது மிகப்பெரிய நாடாக திகழ்ந்து வரும் ஜப்பான் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கல்வி, தொழில் நுட்பம், இராணுவம் என பல துறைகளில் முன்னனியில் இருக்கும் ஜப்பானின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே போகிறது. அதேபோல் ஜப்பானில் பல்வேறு இயற்கை சீற்றங்கள் தொடர் வண்ணம் நடைபெற்ற போதிலும் அதனைக் கண்டு அஞ்சாமல், துவண்டு போகாமல் ஜப்பானியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுருமாக்கி என்பவர் சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மூழ்காமல் இருக்கும் வகையில் புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த சிறிய எலக்ட்ரிக் கார் குறைந்த வேகத்தில் மிதந்து செல்லும். இவர் ரோக்கியோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்த மிதக்கும் காரை வடிவமைத்துள்ளார்.  நான்கு இருக்கைகளுக்கும் அடியில் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் காரின் விலை மிக அதிகம். விரைவில் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவரது சாதனையை ஜப்பானியர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *