Site icon News – IndiaClicks

இஸ்ரோ அனுப்பிய அபூர்வ புகைப்படங்கள்

tamil.neew.co.in-technology

ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட மைக்ரோசாட் மற்றும் நானோசாட் ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் பூமியை விதவிதமாக எடுத்து அனுப்பியுள்ளது. இந்த படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அபூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்து வரும் இஸ்ரோ கடந்த 12ம் தேதி, பிஎஸ்எல்வி சி40 என்ற ராக்கெட் மூலம் 31 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இந்த 31 செயற்கைகோள்களில், மைக்ரோசாட், நானோசாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் நேற்று பூமியை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட மைக்ரோசாட் சாட்டிலைட் அனுப்பிய இந்த புகைப்படங்கள் பல ஆச்சரியங்களை அளித்துள்ளன. .

இது குறித்து விண்வெளி பயன்பாடுகள் மையத்தின் இயக்குனர் தீபன் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ மைக்ரோசாட் செயற்கைகோள்கள் அகச்சிவப்புகதிர்கள் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு பூமியை படம் எடுத்த செயற்கைகோள்கள் இந்த அகச்சிவப்பு முறையில் படம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், நானோசாட் (INS-1C) செயற்கைகோள் இந்தியாவின் மூன்றாவது நானோ நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும். இதன் மூலம் பூமியின் நிலத்தில் உள்ள இயற்பியல் பண்புகள், அளவுகளை கணிக்க முடியும். மேலும் மேகமூட்டம், வேளாண் நிலத்தை ஆய்வு செய்யவும் இந்த சாட்டிலைட் நமக்கு பயன்படும்’ என்று அவர் தெரிவித்தார்.