ஆப்பிள் IPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்!
இந்தியாவில் iPhone X (03/11/2017) முதல் விற்பனைக்கு வந்தது. ஜியோ சிம் கார்டை வாடிக்கையாளர்கள் எப்படிக் கடையைத் திறக்கும் முன்பு இருந்து காத்திருந்து வரிசையில் நின்று வாங்கினார்களோ அதே போன்று iPhone X அலைபேசியையும் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
அதிலும் உச்சபட்சமாக மும்பையின் தானே அருகில் iPhone ரசிகரான மகேஷ் பாலிவால் ‘I Love iPhone X’ என்று பேனர், மேளதாளங்ளுடன் வந்து அலைபேசியை வாங்கிச் சென்றுள்ளார். அதுவும் குதிரை மேலே உட்கார்ந்து கொண்டே மொபைல் போனை வாங்கியும் சென்றுள்ளார்.
iPhone X என்ற பெயர் ஆப்பிள் iPhone மாடல்கள் விற்பனைக்கு வந்து 10 வருடங்கள் ஆனதைக் குறிக்கும் படி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் iPhone X 64ஜிபி அலைப்பேசி 84,000 ரூபாய்க்கும், 128 ஜிபி 1,02,000 ரூபாய்க்கும் சில்வர் மற்றும் ஸில்வர் கிரே வண்ணத்திலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.