Site icon News – IndiaClicks

இந்தியாவின் வரி விதிப்பு அடாவடி; கடுப்பான டிரம்ப்!

tamil.neew.co.in-tax
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 50% சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்[ மோடியை மறைமுகமான தாக்கி பேசியுள்ளார். 
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 60% முதல் 75% வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60%, 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75% வரியும் விதிக்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் இதன் மீதான வரி 50% ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு குறைந்த வரி அல்லது வரியே இல்லாத நிலையில், அமெரிக்க பைக்கிற்கு மட்டும் வரி விதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால், கடுப்பான டிரம்ப் பின்வருமாறு பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒரு ஜென்டில்மேன் என்னிடம் சமீபத்தில் பேசினார். அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக் மீதான வரியை 50%குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
நமது நாட்டின் முன்னணி நிறுவனத்தின் பைக், இந்தியாவில் விற்பனை செய்ய 50% வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவின் அடையாளம் இல்லாத நிறுவனங்களின் பைக்கிற்கு கூட எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்காவில் கூடுதலாக வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என மோடியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.