Site icon News – IndiaClicks

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தை பிடித்த இந்தியா

tamil.neew.co.in-politics 3
டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 81 வது இடத்தில் உள்ளது.
டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் என்ற அமைப்பு. எந்த நாட்டில் ஊழல் குறைவாக உள்ளது என்ற அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாமிடத்திலும், நார்வே நான்காமிடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், சுவீடன், கனடா, லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவை அதற்கடுத்த இடங்களில் வரிசையாக உள்ளன.
மொத்தம் 180 நாடுகள் உள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 81 ஆம் இடத்தை பிடித்துள்ளது, மேலும் இந்திய நாட்டில் ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைப்புகள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் மிரட்டபடுவதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது