Site icon News – IndiaClicks

25 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் இயங்கும்

tamil.neew.co.in-pattasu allai

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் கடந்த 25 நாட்களாக மூடப்பட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியை ஏற்று தற்போது வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதோடு வரும் திங்கள் முதல் வழக்கம் போல் பட்டாசு ஆலைகள் இயங்கவுள்ளது.

மேலும் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைத்து வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், பட்டாசு ஆலைகளை காக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.