Site icon News – IndiaClicks

நீட் தேர்வு: வயது உச்சவரம்புக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

மருத்துவப் படிப்புக்கான நுழைத்தேர்வு நாடு முழுவது நீட் தேர்வு என்று நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீட் தேர்வு எழுதுவோர்க்கான வயது உச்சவரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாது என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.