கூரை மேல் வீசப்பட்ட 3 மாத குழந்தையின் தலை: சந்திர கிரகணத்தின் போது நரபலியா?

கடந்த 31 ஆம் தேதி 150 ஆண்டுகளுக்கு பிறகு முழு சந்திர கிரகணம் தோன்றியது. முன்னதாக 1886 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இதே போன்று ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது முழுமையாக விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்நிலையில் இந்த சந்திர கிரகண நாளின் போது 3 மாத குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டு கூரை மீது 3 மாத குழந்தையின் தலைமட்டும் தனியாக கிடந்து உள்ளது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸாரும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன் தினம் சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது இந்த குழந்தையை பலி கொடுப்பதற்காக தலையை வெட்டி கூரை மீது வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், குழந்தை ஆணா பெண்ணா என்பதை கூட உறுதிபடுத்த முடியவில்லை. குழந்தையின் உடலும் கிடைக்கவில்லை. இருப்பினும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *